டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு 148 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
தற்போது அபுதாபியில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 147 ஓட்டங்களை எடுத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் 24-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
இப்போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ஷாஜாத் 8 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய் டக் அவுட் ஆனார்.
அடுத்து இறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ், அஸ்கர் ஆப்கான் தலா 10 ஓட்டங்ககள் எடுத்தனர். இதனால், ஆப்கானிஸ்தான் 64 ஓட்டத்திற்கு 5 விக்கெட்டை இழந்தது.
அடுத்ததாக 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய நஜிபுல்லா சத்ரன் நிதானமாக விளையாடி 22 ஓட்டங்கள் சேர்த்தார். மத்தியில் இறங்கிய கேப்டன் முகமது நபி , குல்பாடின் நைப் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
Picture: Twitter @ICC
இறுதியாக ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தனர். கடைசிவரை களத்தில் முகமது நபி , குல்பாடின் நைப் தலா 35 ஒய்யங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றனர்.
பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம் 2 விக்கெட்டுகளும், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷதாப் கான் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
இந்நிலையில் தற்போது, 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பக்கா ஃபார்மில் இருக்கும் பாகிஸ்தான் அணி களமிறங்கி ஆடி வருகிறது.