பாபர் அஸாம் இல்லை..இங்கிலாந்தில் 171 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்
Pakistan all out for 171 vs england: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு சுருண்டது.
லீட்ஸில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இமாம் உல் ஹக் 42 ஓட்டங்கள்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லீட்ஸில் இன்று தொடங்கியது. வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் அணியில் பாபர் அஸாம் விளையாடவில்லை.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அஸான் அவைஸ் டக்அவுட் ஆனார்.
ஷான் மசூத் 5 ஓட்டங்களில் வெளியேற, இமாம் உல் ஹக் 42 ஓட்டங்கள் எடுத்தார். சவுத் ஷகீல் 5 ஓட்டங்களிலும், அரைசதம் அடித்த அப்துல்லா ஷாஃபிக் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஓலி ராபின்ஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
ஜோஷ் டங்கின் மிரட்டலான பந்துவீச்சில் சல்மான் ஆகா (21), மொஹம்மது ரிஸ்வான் (12) மற்றும் அலி உஸ்மான் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
48.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஓலி ராபின்ஸன், ஜோஷ் டங் தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |