உலகக்கோப்பை இந்த முறை நிச்சயமாக இந்த அணி தான் அடிக்கும்! CSK வீரர் டுபிளிசிஸ் கணிப்பு
தென் ஆப்பிரிக்கா அணி வீரரும், சென்னை அணியின் நட்சத்திர வீரருமான டுபிளிசிஸ் உலகக்கோப்பையை எந்த அணிக்கு என்று கணித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் டுபிளிசிஸ், உலகக்கோப்பை டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணிக்கான தேர்வில் இல்லை. இவர் அணியில் தேர்வு செய்யப்படாதது, தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் உட்பட கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
இருப்பினும் தென் ஆப்பிரிக்கா அணி லீக் போட்டிகளில் 5-ல் 4 வெற்றி பெற்றும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியவில்லை.
இது குறித்து அந்தணி வீரர் டுபிளிசிஸ் கூறுகையில், நான் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படாத போதே, உலகக்கோப்பை அணியில் இருக்கமாட்டேன் என்று நினைத்தேன்.
இது எதிர்பார்த்த ஒன்று தான், ஆனால் தென் ஆப்பிரிக்கா அணியின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி மிகச் சிறந்த பந்து வீச்சு அணியாக இருந்தது. பெருமையாக இருக்கிறது.
தன்னை பொறுத்தவரை இந்த முறை பாகிஸ்தான் அணி கோப்பையை அடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதே சமயம் சமீபத்திய ஐசிசி டிராபிகளில் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
இதனால் வில்லியம்சன் தலைமையிலான அணிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.