ஹாங்காங் சிக்ஸஸ்; பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இந்தியா
pakistan beat india by 4 wickets in hongkong sixes: 2026 ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில், இந்தியாவிற்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்கில் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இந்தியா
2026 ஹாங்காங் சிக்ஸஸ்(Hong Kong Sixes) தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 6 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 88 ஓட்டங்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுல் திரிபாதி 9 ஓட்டங்களும், நிதிஷ் ராணா 19 ஓட்டங்களும் குவித்தனர்.
அதைத்தொடர்ந்து, ஷசாங் சிங் அதிரடியாக ஆடி 11 பந்துகளில், 2 பவுண்டரி, 5 சிக்ஸர்ஸ் உட்பட 40 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் களமிறங்கிய ராகுல் தெவாடியா மற்றும் அணித்தலைவர் குர்னால் பாண்டிய ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க, நடராஜன் 12 ஓட்டங்கள் குவித்தார்.
88 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 3.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 91 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
கவாஜா நஃபாய் 41 ஓட்டங்களும், அப்பாஸ் அஃப்ரி 35 ஓட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

அப்துல் சமத் 7 ஓட்டங்களும், இர்பான் கான் முதல் பந்திலே சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இதன் மூலம், பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.