பாகிஸ்தான் மண்ணில் இலங்கை அணி படுதோல்வி: மாஸ் சதாகத் 96 ஓட்டங்கள் விளாசல்
Maaz sadaqat 96 runs vs sri lanka: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ராவல்பிண்டியில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
மாஸ் சதாகத்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 2வது போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 215 ஓட்டங்கள் குவித்தது.
மாஸ் சதாகத் (Maaz Sadaqat) 51 பந்துகளில் 96 ஓட்டங்களும் (7 சிக்ஸர், 6 பவுண்டரிகள்), சாஹிப்சதா பர்ஹான் 44 பந்துகளில் 73 ஓட்டங்களும் (5 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
அதிகபட்சமாக மஹீஷ் தீக்ஷணா 32 (26) ஓட்டங்களும், சமிந்து விக்ரமசிங்கே 29 (24) ஓட்டங்களும் எடுத்தனர். மொஹம்மது இம்ரான் 3 விக்கெட்டுகளும், சல்மான் மிர்ஸா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
