ஜேர்மனி மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு: தூதரகத்தில் கொடி அகற்றப்பட்ட விவகாரம்
ஜேர்மனியிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் ஒன்றில் திடீரென நுழைந்த ஆப்கன் நாட்டவர்கள் சிலர், பாகிஸ்தான் கொடியை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜேர்மனி, தங்கள் தூதரகத்தை பாதுகாக்கத் தவறிவிட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஆப்கன் நாட்டவர்கள்
கடந்த சனிக்கிழமை, ஜேர்மனியின் பிராங்பர்ட்டிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்குள், கையில் ஆப்கானிஸ்தான் கொடியுடன் நுழைந்த ஆப்கன் நாட்டவர்கள் சிலர், பாகிஸ்தான் கொடியை அகற்றினார்கள்.
இந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாக, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
#WATCH : Afghans Storm Pakistan Consulate in Frankfurt, Bring Down Pak Flag
— Republic (@republic) July 21, 2024
.
.
.#Pakistan #Afghans #PakistanConsulate #Frankfurt pic.twitter.com/Ub5mqp1R8n
பாகிஸ்தான், தாலிபான்களுக்கு ஆதரவளிப்பதால், ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தின் விளைவே இந்த சம்பவம் என கருதப்படுகிறது.
பாகிஸ்தான் கண்டனம்
ஜேர்மனியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்குள் நுழைந்து ஆப்கன் நாட்டவர்கள் பாகிஸ்தான் கொடியை அகற்றிய சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, பிராங்பர்ட்டிலுள்ள தங்கள் தூதரகத்தை பாதுகாக்க ஜேர்மனிதவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜேர்மனியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தையும், அதன் ஊழியர்களையும் பாதுகாப்பதை உறுதி செய்யும் வியன்னா ஒப்பந்தத்தை ஜேர்மனி மீறிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜேர்மன் அரசுக்கு தங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்வதாகவும், ஜேர்மனி தனது கடமைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |