பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ராஜினாமா: பின்னணி காரணம்?
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மோர்னே மோர்கல் ராஜினாமா செய்துள்ளார்.
வெளியேறிய பாகிஸ்தான்
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விமர்சையாக நடைபெற்று வருகிறது, இதில் லீக் சுற்றுகள் அனைத்து நிறைவடைந்துள்ள நிலையில் அரையிறுதி போட்டிகள் நாளை(நவம்பர் 15ம் திகதி) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தகுதி பெற்றுள்ளனர்.
Morné Morkel with Shaheen Afridi and Haris Rauf. (PTI)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி விளையாடிய 9 லீக் போட்டிகளில் 4 மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ளது.
முதல் 4 அணிகள் தான் அரையிறுதிக்கு தேர்வாகும் என்பதால் பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
மோர்னே மோர்கல் ராஜினாமா
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
Pakistan bowling coach Morne Morkel
இந்த ஆண்டின் ஜூன் மாதம் முதல் ஆறு மாத ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் இணைந்து இருந்தார்.
உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான திறன் வெளிப்பாட்டை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்கல் விலகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |