பாகிஸ்தான் அணியால் மட்டுமே இது முடியும்! மைக்கேல் வாகன் கணிப்பு
டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்த வாய்ப்பு இருக்கும் அணியை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் குரூப் 1ல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணியும், குரூப் 2-வில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணியும் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளன.
இரு அணிகளும் கிட்டதட்ட டி20 உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், இந்த கட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்த பாகிஸ்தானால் மட்டுமே முடியும் என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் அவர் பதிவிட்டதாவது, இப்போது இது மற்ற அணிகளுக்கான ஒரு செய்தி.
இங்கிலாந்து சிறந்த அணி மற்றும் மிகவும் மோசமானது. யார் அவர்களைத் தடுக்கப் போகிறார்கள்?
Now that is a message to the rest … England are the best team & most destructive … Whose going to stop them !?? Only #Pakistan look likely at this stage #T20WorldCup
— Michael Vaughan (@MichaelVaughan) October 30, 2021
இந்த கட்டத்தில் பாகிஸ்தானால் மட்டுமே அது முடியும் என்று ட்வீட் செய்துள்ளார்.
இங்கிலாந்து தனது அடுத்த டி20 உலகக் கோப்பை போட்டியில் திங்கள்கிழமை (1-11-2021) ஷார்ஜாவில் இலங்கையை எதிர்கொள்கிறது, மறுபுறம் பாகிஸ்தான் செவ்வாய்கிழமை (2-11-2021) அபுதாபியில் நமீபியாவை எதிர்கொள்ள விருக்கிறது.