இந்திய வீராங்கனை ஆட்டமிழந்ததும் சைகை - பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம்
இந்திய வீராங்கனை ஷிபாலி வர்மா ஆட்டமிழந்ததும் அவரை நோக்கி சைகை செய்த பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம்
2026 மகளிர் ஆசிய கிண்ண தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
பாகிஸ்தான் 55 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 8.4 ஓவர்களில் 57 ஓட்டங்கள் குவித்து இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா 1.3 ஓவர்களில் 13 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய வீராங்கனை ஷிபாலி வர்மா, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா பந்தை அடித்து அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஷிபாலி வர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியதும் வெளியே போ என்ற ரீதியில், பாத்திமா சனா சைகை செய்தார்.
இது ஐசிசி நன்னடத்தை விதியை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட பாத்திமா சனாவிற்கு போட்டிக்கான கட்டணத்தில் 10 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |