ஆபரேஷன் சிந்தூர்; 5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்?
5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், பயங்கரவாதிகளின் 9 முகாம்களை துல்லியமாக குறி வைத்து தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது.
இந்திய விமானங்கள் சுடப்பட்டதா?
இந்நிலையில், இந்தியாவின் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
3 ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு SU-30 போர் விமானம் உட்பட இந்திய விமானப்படையின் 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்து இந்தியா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஸ்ரீநகர் பகுதியில் பள்ளி கட்டிடம் ஒன்றின் மீது மோதி விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. இது எந்த நாட்டின் விமானம் என உறுதிப்படுத்தப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |