வங்காளதேசத்திடம் பாகிஸ்தான் மரண அடி தோல்வி: இது ஏற்கத்தக்கதல்ல..பயிற்சியாளர் கொந்தளிப்பு
பாகிஸ்தான் அணி முதல் டி20 போட்டியில் வங்காளதேசத்திடம் படுதோல்வியடைந்தது குறித்து பயிற்சியாளர் மைக் ஹெசன் குற்றசாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் படுதோல்வி
டாக்காவில் நேற்று நடந்த டி20 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 110 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பின்னர் ஆடிய வங்காளதேச அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 112 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மைக் ஹெசன் குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் இந்த தோல்விக்கு தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் (Mike Hesson) மிர்பூர் ஆடுகளத்தை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், "இந்த ஆடுகளம் யாருக்கும் ஏற்றதாக இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆசிய கிண்ணம் அல்லது டி20 உலகக் கிண்ணத்திற்கு அணிகள் தயாராக முயற்சிக்கின்றன.
இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. துடுப்பாட்டம் மூலம் நாங்கள் எடுத்த சில முடிவுகளுக்கு இது இன்னும் ஒரு சாக்குப்போக்காக இல்லை. ஆனால் இந்த ஆடுகளம் சர்வதேச தரத்திற்கு ஏற்றதாக இல்லை" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |