பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி!
ராணுவ வீரர்களுடன் பயிற்சி பெறுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால், உடற்தகுதியை மேம்படுத்த பாகிஸ்தான் வீரர்கள் ராணுவ வீரர்களுடன் பயிற்சி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் Mohsin Naqvi வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
வலிமை மற்றும் உடற்தகுதியை அதிகரிக்கும் நோக்கில் ராணுவ வீரர்களுடன் பயிற்சி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.
செவ்வாயன்று இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சில பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முன்னிலையில் மொஹ்சின் நக்வியின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (Pakistan Super League) போட்டிகள் முடிவடைந்தவுடன் பயிற்சி முகாம் நடைபெறும்.
Pakistan Super League மார்ச் 18 அன்று முடிவடையும். அதையடுத்து மார்ச் 25 முதல் ஏப்ரல் 8 வரை பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் பத்து நாள் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில், பாகிஸ்தான் வீரர்களின் உடற்தகுதி மற்றும் பலம் பாரிய பிரச்சனையாக உள்ளது என அந்த அணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Pakistan Cricket Team, Pakistan Army, Pakistan cricket team fitness training with army