பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு! நான் மிகவும் பணக்காரனாக உணர்க்கிறேன்..37 வயது பிரபலம் பெருமிதம்
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் அஸார் அலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அஸார் அலி
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 17ஆம் திகதி தொடங்குகிறது.
டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் கடைசி போட்டி கராச்சியில் நடக்கிறது.
@icc-cricket
ஓய்வு அறிவிப்பு
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வீரர் அஸார் அலி (37) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 27 மற்றும் 40 ஓட்டங்கள் எடுத்தார். கராச்சி டெஸ்ட்டுடன் அவர் ஓய்வு பெற உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'எனது நாட்டை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு ஒரு பெரிய மரியாதை மற்றும் பாக்கியம். ஆழ்ந்து சிந்தித்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என்பதை உணர்ந்தேன். இது ஒரு அழகான பயணம். என் பெற்றோர், மனைவி, உடன் பிறந்தவர்கள் மற்றும் குழந்தைகள் முழுவதும் எனக்கு பலமாக இருந்துள்ளனர்.
@AP
நான் வலுவான பந்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன், உடை மாற்றும் அறையைப் பகிர்ந்து கொள்வதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டேன். இவர்களை எனது நண்பர்கள் என்று அழைப்பதன் மூலம் நான் மிகவும் பணக்காரனாக உணர்க்கிறேன்.
சில அற்புதமான பயிற்சியாளர்கள் கீழ் விளையாடியதற்கும் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். எனக்காக நிர்ணயித்த பெரும்பாலான இலக்குகளை டிக் செய்த ஒரு நிறைவான கிரிக்கெட் வீரராக நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
@AFP
பாகிஸ்தானுக்கு நான் கேப்டனாக இருந்தது எனக்கு மிகவும் பெருமையான விடயம். என் வாழ்க்கையின் மிக அழகான தருணங்களை நான் என்றென்றும் போற்றுவேன்' என தெரிவித்துள்ளார்.
அஸார் அலி 96 டெஸ்ட் போட்டிகளில் 19 சதம், 35 அரைசதங்களுடன் 7097 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 302 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.