திடீரென டிரெண்டாகும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் மனைவி: எதனால் தெரியுமா?
இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பது போல், பாகிஸ்தானில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் PSL கிரிக்கெட் தொடர், கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஹசன் அலி மனைவி
ஹசன் அலி விளையாடும் போட்டிகளில், அவரை ஊக்குவிக்க அவரது மனைவி தனது குழந்தைகளுடன், மைதானத்திற்கு வருவது உண்டு.
ஹசன் அலிக்கும் அவரது மனைவி ஷாமியா அர்சோவிற்கும், கடந்த 2019 ஆம் ஆண்டு துபாயில் திருமணம் நடைபெற்றது.
ஷாமியா அர்சோ இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். பலரும் அவரை பாலிவுட் நடிகைகளை போன்ற அழகில் இருப்பதால், பலரும் அவரை நடிகை என நினைத்திருந்தனர்.
ஆனால், மானவ் ரச்னா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்ற அவர், உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார். அதன் பின்னர் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
ஜாகீர் அப்பாஸ், மோஷின் கான், சோயிப் மாலிக் ஆகியோரைத் தொடர்ந்து, இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்ட நான்காவது பாகிஸ்தான் வீரர் ஹசன் அலிதான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |