வெறும் 50 ஆயுதங்களிலே சண்டையை நிறுத்த முடிவெடுத்த பாகிஸ்தான்.., இந்திய விமானப்படை துணைத் தளபதி
வெறும் 50 ஆயுதங்களிலே சண்டையை நிறுத்த பாகிஸ்தான் முடிவெடுத்ததாக இந்திய விமானப்படை துணைத் தளபதி தகவல் தெரிவித்துள்ளார்.
பணிந்தது பாகிஸ்தான்
இந்திய தலைநகரான டெல்லியில் நேற்று ஏரோஸ்பேஸ் பவர் என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில், முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான், இந்திய விமானப்படை துணைத் தளபதி நம்தேஸ்வர் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம்
அப்போது முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் பேசுகையில், "ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இதனால் நாம் வருடம் முழுவதுமாக போர் நிலையில் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
மேலும், இந்திய விமானப்படை துணைத் தளபதி நம்தேஸ்வர் திவாரி பேசுகையில், "ஆபரேஷன் சிந்தூரில் நாம் செய்ததை விட சிறந்த எடுத்துக்காட்டு வேறு எதுவும் இருக்க முடியாது.
அதாவது நாம் வான்வழி தாக்குதலுக்காக வெறும் 50 ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தினோம். அதுவே நம் எதிரி நாட்டை சண்டையை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்தது. இது குறித்து அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |