இப்படிலாமா செய்வாங்க ? கடுப்பான பாகிஸ்தான் ரசிகர்கள்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் செய்த செயல் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேட்சை தவறவிட்ட பாகிஸ்தான்
சர்வதேச கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சுக்கு பாகிஸ்தான் எவ்வளவு பிரபலமோ அதே போன்று ஃபில்டிங்கிற்கும் அவர்கள் தான் பிரபலம், கேட்ச்கள் தான் போட்டியை வென்று தரும் என்று கிரிக்கெட்டில் மிக பிரபலமான வார்த்தை உண்டு.
ஆங்கிலத்தில் Catches win matches என்று சொல்வார்கள். ஆனால் பல கேட்ச்களை தவற விட்டு, பல முக்கிய போட்டிகளை கோட்டை விட்டும் இருக்கிறார்கள்.
வைரலாகும் புகைப்படம்
இந்த நிலையில், ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்திலும் அப்படி ஒரு காமெடி நடந்தது.
இறுதி ஆட்டத்தில் இலங்கை வீரர் ராஜபக்ச தனி ஆளாக நின்று போராடி கொண்டிருந்தார்.
ராஜபக்சாவின் விக்கெட்டை எடுத்தால், பாகிஸ்தானுக்கு அது சாதகமாக இருந்திருக்கும். 18.6 வது ஓவரில், ஹஸ்னாயின் வீசிய பந்தை ராஜபக்சா தூக்கி அடித்தார்.
அப்போது சிக்சர் லைனில் நின்ற ஆசிஃப் அலி, அதனை பிடித்தார். அப்போது சம்பந்தமே இல்லாமல் ஓடி வந்த ஷதாப் கான், கேட்ச் பிடிக்கிறேன் என்று ஆசிஃப் அலியை மோதினார்.
இதனால், அவர் பிடித்திருந்த பந்து சிக்சருக்கு சென்றது. இந்த காட்சியை பார்த்ததும் பாகிஸ்தான் ரசிகர்கள் கடுப்பாக, மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.