நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்த பாகிஸ்தான் - மீண்டும் இந்தியாவுடன் மோதல்?
நமீபியாவை வீழ்த்திய பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்த பாகிஸ்தான்
2026 T20 உலக கிண்ணத்தின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்ஸதா ஃபர்ஹான் (Sahibzada Farhan) 58 பந்துகளில் 11 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் விளாசி சதம் அடித்தார்.
இதன் மூலம், T20 உலக கிண்ணத்தில் சதம் விளாசிய 2வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி, 17.3 ஓவர்களில் 97 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம், 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
மீண்டும் இந்தியாவுடன் மோத வாய்ப்புள்ளதா?
சூப்பர் 8 சுற்றில் இந்தியா A பிரிவிலும், பாகிஸ்தான் B பிரிவிலும் இடம் பெற்றுள்ளதால், இந்த சுற்றில் இரு அணிகளும் நேருக்குநேர் மோத வாய்ப்பில்லை.
சூப்பர் 8 சுற்றில், பாகிஸ்தான் 21 ஆம் திகதி நியூஸிலாந்தையும், 24 ஆம் திகதி இங்கிலாந்தையும், 28 ஆம் திகதி இலங்கையையும் எதிர்கொள்ள உள்ளது.

இந்தியா 22 ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவையும், 26 ஆம் திகதி ஜிம்பாபேவையும், மார்ச் 1 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளையும் எதிர்கொள்ள உள்ளது.
இரு அணிகளும் அரை இறுதி மற்றும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றால் மீண்டும் நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |