ஷார்ஜாவில் நியூசிலாந்து வீரர்களை பழி தீர்த்த பாகிஸ்தான் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
ஷார்ஜாவில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றிப்பெறும் தருவாயில் இருந்த போது ரசிகர்கள் செக்யூரிட்டி.. செக்யூரிட்டி என கோஷமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நேற்று ஷார்ஜாவில் நடந்த டி20 உலகக் கோப்பை ‘சூப்பர் 12’ சுற்றில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் பட்டையை கிளப்பியுள்ளது.
சூப்பர் 12 சுற்றில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று ஷார்ஜாவில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெறும் தருவாயில் இருந்த போது மைதானத்தில் இருந்த அந்நாட்டு ரசிகர்கள் ‘செக்யூரிட்டி.. செக்யூரிட்டி’ கோஷமிட்டு நியூசிலாந்து அணியை பழிதீர்த்தனர்.
Security ? pic.twitter.com/TYJO7916uR
— Usama Moon ?? (@UK7242) October 26, 2021
கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி, போட்டி தொடங்கும் சில மணிநேரங்களுக்கு முன் ‘பாதுகாப்பு’ பிரச்சினை இருப்பதாக காரணம் கூறி பாகிஸ்தானுடனான தொடரை ரத்து செய்து மறுநாளே நாடு திரும்பியது.
இதற்கு பழிதீர்க்கும் வகையில் ஷார்ஜாவில் பாகிஸ்தான் ரசிகர்கள் ‘செக்யூரிட்டி.. செக்யூரிட்டி’ என கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.