வீட்டுக்கு போறேன்...மனசு சரியில்ல! கோலியின் பழைய டுவிட்டை எடுத்து இப்போது பழிவாங்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்
உலகக்கோப்பை டி20-யில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாத காரணத்தினால், கோலியை பாகிஸ்தான் ரசிகர்கள் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும், உலகக்கோப்பை டி20 தொடர் தற்போது அரையிறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
லீக் போட்டிகளில், இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துடன் தோல்வியடைந்ததால், அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறுகிறது.
Same energy https://t.co/0M78yqpV4I pic.twitter.com/fK9SQuKZSY
— Syeda fizza (@fizza_ali_zaidi) November 7, 2021
அதே சமயம் இந்திய அணியின் பரம எதிரி என்று கூறப்படும் பாகிஸ்தான் அணி, லீக் போட்டியில் விளையாடிய 5 போட்டிகளிலும், வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் அரையிறுதிக்குத் தகுதி பெறாத இந்திய அணியின் கேப்டன் கோலியை பாகிஸ்தான் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் திகதி அன்று கோலி போட்டிருந்த டுவிட்டரில், நாளை வீட்டுக்குத் திரும்புகிறேன். மனசே சரியில்லை என குறிப்பிட்டிருந்தார்.
Going to final after semifinal. ?? Semi Finals #Mumbaiairport #India https://t.co/ORv6UdnxNp
— Hamza khan (@Hamzakh43854527) November 7, 2021
இதை பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் தற்போது பகிர்ந்து, டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் அவர் நாட்டுக்குத் திரும்புவதாக கேலி செய்து வருகின்றனர்.
கோலி இந்த டி20 உலகக்கோப்பையோடு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.