இந்தியாவில் பாகிஸ்தான் விளையாட வேண்டுமென்றால்... அமைச்சரின் அறிக்கை
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
வருகிற அக்டோபர் மாதம் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது, இதில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் இந்தியாவில் விளையாடுகிறது.
இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி வந்து விளையாடுமா என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், பாகிஸ்தான் அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
அதில், பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் எடுக்கும் முடிவை பொறுத்தே பாகிஸ்தான் அணி விளையாடுவது உறுதியாகும்.
இந்நிலையில், பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் இஷான் மசாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த விவகாரத்தில் என் கருத்து என்னவென்றால் ஆசிய கோப்பையை பொதுவான மைதானத்தில் (பாகிஸ்தான் அல்லாமல் இலங்கையில்) விளையாட வேண்டுமென இந்தியா கோரிக்கை வைக்கும்போது, உலக கோப்பையையும் பொதுவான மைதானத்தில் (இந்தியாவில் அல்லாமல் இலங்கை போன்ற பிற நாடுகளில்) விளையாட வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுப்போம்.
இந்த விவகாரத்தில் 11 மந்திரிகள் கொண்ட குழு ஆலோசனை நடத்தி முடிவை பிரதமர் ஷெரிப்பிடம் தெரிவிப்போம் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு செல்லுமா என்பது குறித்து பிரதமர் தான் இறுதி முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |