என்னங்க இப்படி முதல் பந்துலேயே டக் அவுட் ஆகுறாரு கோஹ்லி! இவரை பார்த்து ஆட கத்துக்கோங்க... பிரபல ஜாம்பவான் அட்வைஸ்
தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் கோஹ்லி இளம் வீரரான கே.எல் ராகுலிடம் பேட்டிங் குறித்து கற்று கொள்ள வேண்டும் என ஜாம்பவான் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் தற்போது டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சதம் விளாசாமல் இருந்து வரும் கோஹ்லி இம்முறையாவது இந்த இங்கிலாந்து தொடரில் சதத்துடன் ரன் குவிப்பை துவங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து கோல்டன் டக்காகி வெளியேறினார்.
அவரின் இந்த விக்கெட் வீழ்ச்சி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா, கோஹ்லி ராகுலிடம் எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
ராகுல் பேட்டிங் செய்யும் பொழுது முறையான ஸ்டம்பில் நின்று பந்தினை கவர் செய்து விளையாடுகிறார். மேலும் அவருக்கு ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்றும் பந்து எங்கே வருகிறது என்பதும் தெளிவாக தெரிகிறது.
கோஹ்லி போன்ற சிறந்த வீரர்கள் எந்த வயதில் இருந்தாலும் இதுபோன்று இளம் வீரர்களிடம் இருந்து சிறிய சிறிய விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
விரைவில் பேட்டிங் தான் செய்யும் தவறை திருத்தி கோஹ்லி நிச்சயம் ஒரு செட்டிலான இன்னிங்ஸ் விளையாடுவார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.