பாபர் அசாமிற்கு பயத்தை காட்டிய வீரர்: வங்காளதேசத்திடம் தடுமாறும் பாகிஸ்தான் அணி
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது.
சரிந்த விக்கெட்டுகள்
ராவல்பிண்டியில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்று வங்காளதேசம் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.
ஹசன் மஹ்முத் பந்துவீச்சில் 2 ஓட்டங்களில் அப்துல்லா ஷாஃபிக் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ஷான் மசூட் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சோரிஃபுல் பந்துவீச்சில் வெளியேறினார்.
Out or not out❓
— Pakistan Cricket (@TheRealPCB) August 21, 2024
Shan Masood is dismissed by Shoriful Islam.#PAKvBAN | #TestOnHai pic.twitter.com/8OgkgQKHPa
பாபர் அசாம் டக்அவுட்
பின்னர் வந்த பாபர் அசாம் (Babar Azam) 2 பந்துகளில் ரன் எடுக்காமல் சோரிஃபுல் ஓவரில் லித்தன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 16 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.
எனினும் சைம் அயூப் மற்றும் சவுத் ஷகீல் இருவரும் பலமான கூட்டணி அமைத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 100 ஓட்டங்களை கடந்தது. அரைசதம் கடந்த அயூப் 56 (98) ஓட்டங்கள் எடுத்து ஹசன் மஹ்முத் ஓவரில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 158 (41) ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஷகீல் 57 ஓட்டங்களுடனும், முகமது ரிஸ்வான் 24 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். சோரிஃபுல் மற்றும் மஹ்முத் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |