பிரித்தானியாவில் ஓரின சேர்க்கையாளர்களாக நடிக்கும் பாகிஸ்தானியர்கள் - என்ன காரணம்?
பிரித்தானியாவில் தஞ்சம் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க, புலம்பெயர்ந்தோர் தங்களைத் ஓரினச்சேர்க்கையாளர்களாகக் காட்டிக்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓரின சேர்க்கையாளர்களாக நடிக்கும் பாகிஸ்தானியர்கள்
சட்டவல்லுநர்கள் அடங்கிய ஒரு வலையமைப்பும் இதனை பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கல்வி, சுற்றுலா, வேலை விசா முடிந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த புலம்புயர்ந்தோர், தங்களது நாட்டில் ஓரினசேர்க்கை சட்டவிரோதம் என்பதால் அங்கு திருப்பி அனுப்பப்பட்டால் தங்கள் உயிருக்கு ஆபத்து எனக்கூறுவதே இந்த திட்டம் ஆகும்.

போலியான புகலிடக் கோரிக்கைகளைத் தயாரிப்பதற்கு, குடிவரவு ஆலோசகர்கள் 7,000 யூரோ வரை கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த குடிவரவு ஆலோசகர், “ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளரா என்பதைக் கண்டறிய எந்தச் சோதனையும் இல்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

நான் உங்களுக்கு ஒருவரிடமிருந்து ஒரு கடிதத்தைக் கொடுப்பேன், அதனுடன் நாங்கள் சில புகைப்படங்களையும் எடுப்போம், நீங்கள் இங்கே வசித்து வேலை செய்யலாம், மேலும் சலுகைகளைப் பெறவும் தகுதியுடையவர் ஆவீர்கள்.
உங்கள் மனைவியை பாகிஸ்தானிலிருந்து அழைத்து வந்தால், அவரும் தன்னை ஒரு ஓரினச் சேர்க்கையாளராக என்று கூறி தஞ்சம் அடையலாம் பரிந்துரைத்துள்ளார்.
ஓரினச்சேர்க்கையாள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான ஆதரவுக் குழுவான வொர்செஸ்டர் எல்ஜிபிடி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலிருந்து வெளியே வந்த ஆண்கள் அனைவரும் தாங்கள் யாருமே உண்மையாகவே ஓரினச்சேர்க்கையாளர்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |