ஹசரங்காவும், ஷானகாவும் பள்ளி குழந்தைகள் போல் அவுட்டாகினர்! இலங்கை அணியை விமர்சித்த பாகிஸ்தான் வீரர்
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை தோல்வியுற்றதை பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் விமர்சித்துள்ளார்.
தொடரை இழந்த இலங்கை
இலங்கை சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, முதல் 2 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் (Kamran Akmal) இலங்கை அணி விளையாடியதை விமர்சித்துள்ளார்.
இரண்டாது போட்டியில் இலங்கை அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 130 ஓட்டங்கள் என நல்ல நிலையில் இருந்தது. ஆனால், அடுத்த 31 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து ஆல்அவுட் ஆனதாக குறிப்பிட்டுள்ளார்.
கம்ரான் அக்மல்
மேலும் அவர், ''இலங்கை அணி கடைசி 5 ஓவரில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 190 ஓட்டங்களை எட்டும் என்று தெரிந்த நிலையில், அவர்களால் 161 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அவர்கள் பொறுப்பேற்கவில்லை. ஹசரங்காவும், ஷானகாவும் வெளியேறிய விதம் சில பள்ளிக் குழந்தைகள் விளையாடுவது போல் இருந்தது. விளையாட்டு விழிப்புணர்வு மற்றும் பொறுப்பு போன்ற விடயங்கள் இல்லை'' என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |