தயவுசெய்து இதை செய்யுங்கள் தோனி! பிறந்தநாளில் வேண்டுகோளுடன் வாழ்த்திய பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷஹனவாஸ் தஹானி இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சகவீரர்கள், ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹனவாஸ் தஹானியும் தனது வாழ்த்தினை தோனிக்கு தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எனது முன்னோடியும், உத்வேகம் தருபவரும், அனைத்து காலகட்டங்களிலும் சிறந்த பொழுபோக்கு மற்றும் முடித்து வைக்கக்கூடிய வீரராகவும் இருக்கும் தோனி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சார் நீங்ககள் இப்போதும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இளமையாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறீர்கள். தயவுசெய்து இன்னும் சில ஆண்டுகளுக்கு எங்களை மகிழ்விக்க விளையாடுங்கள்' என தெரிவித்துள்ளார்.
To one of the all times great entertainer & finisher, an inspiration and role model, I wish you a happy birthday sir @msdhoni. And sir You are still young & fit enough to play cricket, so please keep entertaining us for atleast few more years❤️?. pic.twitter.com/z7ByQtCJwc
— Shahnawaz Dahani (@ShahnawazDahani) July 7, 2022
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். அடுத்த சீசனில் விளையாடுவேன் எனவும் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.