ஏன் இவ்வளவு பேசுறீங்க? களத்தில் எதிரணி வீரரிடம் எகிறிய கோலி... தடுத்த தோனி
கிரிக்கெட் போட்டியின் போது விராட் கோலி தன்னை வம்பிழுத்து ஸ்லெட்ஜிங் செய்ததாக பாகிஸ்தான் வீரர் சோஹைல் கான் கூறியுள்ளார்.
சோஹைல் கான்
2015 உலகக் கோப்பை போட்டியின் போது விராட் கோலி தன்னை ஸ்லெட்ஜிங் செய்ய முயன்றது குறித்து தற்போது பேசியிருக்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் கான்.
யூடியுப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், நான் பேட் செய்ய நின்றிருந்த போது, விராட் கோலி என்னிடம் வந்து இப்போதுதான் வந்துள்ளீர்கள், நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்களே' என்று சீண்டினார்.
Getty
தோனி
அதற்கு நான் பதிலடியாக, ''மகனே, நீ இந்தியாவுக்காக அண்டர்-19 விளையாடும் போது, நான் ஒரு டெஸ்ட் வீரர்'” என்றேன்.
அப்போது மிஸ்பா என்னை அமைதியாக இருக்கும்படி சொன்னார்.
அதே போல், தோனி கோலியிடம், ''விட்டுவிடுங்கள். அவர் (சோஹைல் கான்) அனுபவம் வாய்ந்தவர். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாது" என்று கூறியதாக சோஹைல் கான் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.