பாகிஸ்தான் அணி வீரர்கள் தான் இந்திய கிரிக்கெட் வீரர்களை விட திறமைவாய்ந்தவர்கள்! பிரபல ஆல்ரவுண்டர் அதிரடி
இந்தியாவை ஒப்பிடும் போது பாகிஸ்தான் அணி கூடுதல் திறமை வாய்ந்தது என முன்னாள் ஜாம்பவான் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஒரு சமயத்தில் முன்னணி ஆல்ரவுண்டராக இருந்தவர் அப்துல் ரசாக்.
அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் அணியிடம் அதிக திறமைகள் உள்ளன, இந்தியாவை ஒப்பிடும் போது பாகிஸ்தான் அணி கூடுதல் திறமை வாய்ந்தது, ஆகவே எப்போதும் இந்தியாவுடன் நம்மை ஒப்பிடாதீர்கள்.
முதலில் நாம் விராட் கோஹ்லியையும் பாபர் ஆசாமையும் ஒப்பிடக்கூடாது. இருவரும் வேறுபட்டவர்கள் ஆவார்கள்.
இவர்களை ஒப்பிட வேண்டுமெனில் பாகிஸ்தான், இந்தியா ஆடினால்தான் ஒப்பிட முடியும்.
கோக்லி நல்ல வீரர், பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக ஆடியுள்ளார்.
இந்தியர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்களை ஒப்பிடுவதில்லை.
மாறாக நாம் ஏன் இப்படி ஒப்பிட வேண்டும், மேலும் நம்மிடம் அவர்களை விட நிறைய திறமைகள் உள்ளன என கூறியுள்ளார்.