ஐபிஎல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? யாரை எடுக்க போட்டி வரும்?

IPLAuction IPLAuction2022 PakistanPlayers
By Kaviarasan Dec 03, 2021 12:16 AM GMT
Report

ஐபிஎல் ஏலத்தில் இந்த ஆண்டு பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்பட்டால் எப்படி இருக்கும், யார் யாரை எல்லாம் எடுக்க அணிகள் போட்டி போடும் என்பதை பார்ப்போம்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடருக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம், உலகில் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒரு இடத்தில் சேருவதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது, கடைசி ஓவர் வரை போட்டி செல்லும், ஒரு பந்தில் ஆட்டம் எல்லாம் மாறியதை கண்டுள்ளோம்.

அப்படிப்பட்ட இந்த ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி இல்லை. ஒருவேளை இந்த ஐபிஎல் 2022 ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்பட்டால் போட்டியில் அனல் பறக்கும்.

பாபர் அசாம்


பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான பாபர் அசாம், டி20-யில் சமீபகாலமாக துவக்க வீரராக கலக்கி வருகிறார். நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் எதிரணியை தன்னுடைய அதிரடியால் கதி கலங்க வைத்தார்.

ஐபிஎல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? யாரை எடுக்க போட்டி வரும்? | Pakistan Players Possible 2022 Auction Wht Hpn

முகமது ரிஸ்வான்

இவரைத் தொடர்ந்து அடுத்த படியாக லிஸ்ட்டில் உள்ளவர் என்றால் அது முகமது ரிஷ்வான் தான், இவர் ஐபிஎல் ஏலத்தில் வந்தால் அதிக விலைக்கு வாங்க ஐபிஎல் அணிகள் போட்டி போடும். விக்கெட் கீப்பிங், துவக்க வீரராக அதிரடி காட்டுவது என சமீப காலத்தில், தன்னை ஒரு சிறந்த வீரராக காட்டி வருகிறார்.

ஷாகின் ஷா அப்ரிடி

பாகிஸ்தான் அணியில் தற்போது அபாயகரமான பந்து வீச்சாளராக உருவெடுத்திருப்பவர் தான் ஷாகின் ஷா அப்ரிடி. இவரது பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் எதிரணியினர் திணறி வருகின்றனர்.

ஐபிஎல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? யாரை எடுக்க போட்டி வரும்? | Pakistan Players Possible 2022 Auction Wht Hpn

உலகக்கோப்பை தொடரில் இவர் குறிப்பாக கே.எல்.ராகுலை போல்டாக்கி வெளியேற்றியதை யாரும் எளிதில் மறக்க முடியாது. அதுமட்டுமின்றி டி20-யில் ஒரு சிறந்த பவுலராக இவர் விளங்கி வருவதால், இவருக்கும் ஒரு கடும் போட்டி நிலவும்.

ஆசிப் அலி

போட்டியின் முடிவையே மாற்றக் கூடியவர். கடைசி கட்டத்தில் அணிக்கு 2 ஓவரில் 30 ரன் தேவை என்றால் கூட, அதை முடித்து தரும் திறமை கொண்டவர்.

பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த ஒரு சிறந்த பினிஷர், இது போன்ற ஒரு பினிஷர் கிடைத்தால் ஐபிஎல் அணிகள் சும்மாவா விடுவார்கள், இவர் ஐபிஎல் ஏலத்திற்கு வந்தால், அதிக தொகைக்கு போக வாய்ப்புண்டு. இவர்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான், பகர் சமான் , முகமது ஹபீஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.  

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US