பஹல்காம் தாக்குதலை குறிப்பிட்டு விளையாட மறுத்த இந்தியா: இறுதிப்போட்டியில் நுழைந்த பாகிஸ்தான்
லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு அரையிறுதி விளையாடாமலே பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.
உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதிபெற்றன.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலை காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா விளையாட மறுத்தது.
இதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இறுதிப் போட்டிக்கு தகுதி
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி அரையிறுதி விளையாடாமலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.
முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியிலும் இந்தியா விளையாட மறுப்பு தெரிவித்தது.
இதற்கிடையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |