அமெரிக்காவில் வேலை செய்தவர் - இன்று பாகிஸ்தானின் மிகப்பெரிய பணக்காரரானது எப்படி?
இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்து இரண்டு தனித்தனி நாடுகளாக 1947 இல் மாறியது. அதன்பிறகு இந்தியா முன்னேறிக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில் பாகிஸ்தான் நிதி ரீதியாக மிகவும் பின்தங்கியது.
அந்நேரத்திலும் பாகிஸ்தானின் மிகப் பெரிய பணக்காரர் ஒருவர் இருகிறார். ஷாஹித் கான் என்பவரே பாகிஸ்தானின் மிகப் பெரிய பணக்காரர் ஆவார்.
யார் இந்த ஷாஹித் கான்?
ஷாஹித் கான் பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தவர். 1967 இல் பல்கலைக்கழகத்தில் படிக்க அமெரிக்கா சென்றார். அப்போது அவருக்கு 16 வயதுதான்.
பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாததால், வெளிநாட்டில் வாழ்வதற்காக பகுதி வேலையும் செய்துக்கொண்டார்.
பாத்திரம் கழுவுதல் அவரது முதல் வேலையாகும். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு 1.2 டொலர் கிடைத்துள்ளது.
இவர் தனது கல்லூரி வாழ்க்கையில் பொறியியல் பட்டப்படிப்பில் BSc பட்டம் பெற்றார்.
கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம், ஷாஹித் கான் தனது பணத்தில் சிறிது சேமிக்க ஆரம்பித்தார்.
பின் ஷாஹித் கான் ஒரு பாகிஸ்தான், அமெரிக்க தொழிலதிபர் மற்றும் விளையாட்டு ஜாம்பவான் ஆனார்.
மோட்டார் வாகன உதிரிபாகங்களை விநியோகித்து, தனக்கென்ன Flex-N-Gate என்ற நிறுவனத்தை நிறுவினார்.
பிரீமியர் லீக்கின் மற்றும் அமெரிக்க மல்யுத்தத்தின் (AEW) இணை உரிமையாளராக மாறினார்.
ஷாஹித் கான் 11.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 97,256 கோடி) மதிப்புடன் பாகிஸ்தானின் மிகப் பெரிய பணக்காரராக இருகிறார். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு இடையில் ஒப்பிட்டு பார்த்தால் இவர் இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |