பாகிஸ்தானில் கோடிகளில் புரளும் பணக்கார பெண்.., சொத்துமதிப்பு பற்றிய விவரம்
பாகிஸ்தான் நாட்டில் பணக்கார பெண்மணி என்று கூறப்படும் இக்ரா ஹாசனை பற்றி தான் பார்க்க போகிறோம்.
யார் இவர்
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் சுதந்திரம் அடைந்தாலும் பொருளாதாரம், அறிவியல், விண்வெளி என அனைத்து துறைகளிலும் பாகிஸ்தான் பின்தங்கியுள்ளது. ஆசியாவின் முதல் 10 கோடீஸ்வரர்களில் 2 இந்தியர்கள் இடம்பெற்றிருந்தாலும் ஒருவர் கூட பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இல்லை.
இருந்தாலும் கோடீஸ்வரர்களை பற்றி பேசும் போது முதலில் நினைவுக்கு வருவது மியான் முகமது மன்ஷா தான். அந்நாட்டினுடைய இரண்டாவது கோடீஸ்வரர் இவர் தான். பாகிஸ்தான் நாட்டின் அம்பானி என்று கூட இவரை சொல்லலாம்.
இவருடைய மகன் மியான் உமர் மன்ஷா, நிஷாத் மில்ஸின் தலைமை நிர்வாகியாகவும், ஆடம்ஜி இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் BoDன் தலைவராகவும் இருந்து வருகிறார். இவருடைய மனைவி தான் இக்ரா ஹாசன். இவர் தான் பாகிஸ்தான் நாட்டின் பணக்கார பெண்மணி. இவரை பற்றி தான் பார்க்க போகிறோம்.
சொத்து மதிப்பு
இக்ரா ஹாசன் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், அவர் நீண்ட நாள்கள் இருந்தது இங்கிலாந்தில் தான். அங்குள்ள வர்த்தகத்தை நன்கு புரிந்து வைத்துள்ளவர்.
இவர், லண்டனில் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் சர்வதேச அரசியலில் B.sc பட்டமும், லண்டன் பல்கலைக்கழக ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸில் சர்வதேச உறவுகளில் M.sc பட்டமும் பெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள சொத்து மற்றும் லண்டனில் உள்ள 5 ஸ்டார் ஹொட்டலை நிர்வகிக்கும் சி.இ.ஓ அதிகாரியாக இருந்துள்ளார். மேலும், பல நிறுவனங்களில் இயக்குநராகவும் இருந்துள்ளார்.
பாகிஸ்தானின் பணக்கார பெண்மணி என்று அழைக்கப்படும் இக்ரா ஹாசனின் சொத்துமதிப்பு ரூ.8,300 கோடியாகும். ஆனால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.7.63 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |