முதல் சதத்தை பதிவு செய்த வீராங்கனைகள்: பாகிஸ்தான் 343 ஓட்டங்கள் குவிப்பு
ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் தொடக்க வீராங்கனைகள் சதம் விளாசினர்.
சதாப் ஷாமஸ், குல் பெரோஸா
பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது. சதாப் ஷாமஸ், குல் பெரோஸா கூட்டணி நங்கூர பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இருவரின் அபார ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதிரடி காட்டிய குல் பெரோஸா (Gull Feroza) 95 பந்துகளில் 100 ஓட்டங்கள் விளாசி முதல் சதத்தை பதிவு செய்தார். அவரது ஸ்கோரில் 13 பவுண்டரிகள் அடங்கும்.
முதல் விக்கெட்டுக்கு 189 ஓட்டங்கள்
பெரோஸா, ஷாமஸின் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 189 ஓட்டங்கள் குவித்தது. அதன் பின்னர் சதாப் ஷாமஸும் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

சதாப் ஷாமஸ் (Sadaf Shamas) 112 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.
அணித்தலைவர் ஃபாத்திமா சனா 13 பந்துகளில் 25 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி) விளாசினார்.
சிட்ரா அமின் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களும், ஆலியா ரியாஸ் 27 ஓட்டங்களும் எடுக்க பாகிஸ்தான் 343 ஓட்டங்கள் குவித்தது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |