பப்ஜி காதலனுக்காக எல்லை கடந்து வந்த சீமா ஹைதர்: இந்திய பிரதமருக்கு விடுத்துள்ள கோரிக்கை
பப்ஜி காதலனுக்காக எல்லை கடந்து வந்த பாகிஸ்தான் பெண்ணான சீமா ஹைதர், இந்திய பிரதமருக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
பப்ஜி காதலனுக்காக எல்லை கடந்து வந்த பெண்
பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் என்னும் பெண்ணுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கும் நிலையில். அவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் மீனா என்னும் இளைஞர் மீது காதல் உருவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து சீமா தனது கணவரையும் குழந்தைகளையும் பிரிந்து சட்டவிரோதமாக நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து சச்சின் மீனாவுடன் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வந்தார்.
பின்பு, சீமா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்து மதத்திற்கு மாறிய பிறகு, சீமா ஹைதர் நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோவிலில் சச்சின் மீனாவை மணந்தார்.
சமீபத்தில் சச்சின் சீமா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய பிரதமருக்கு விடுத்துள்ள கோரிக்கை
பஹல்காம் தாக்குததலைத் தொடர்ந்து, பாகிஸ்தானியர்கள் அனைவரும் தங்கள் நாட்டுக்குத் திரும்ப இந்தியா உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் சீமா கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், நான் பாகிஸ்தானின் மகளாக இருந்தேன், ஆனால், நான் இப்போது இந்தியாவின் மருமகள், நான் பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பவில்லை.
என்னை இந்தியாவில் வாழ அனுமதிக்குமாறு இந்திய பிரதமர் மோடியையும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகியையும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
அத்துடன், சீமாவின் சட்டத்தரணியான AP சிங்கும், சீமா இனியும் பாகிஸ்தான் குடிமகள் அல்ல, அவர் இந்தியாவின் நொய்டாவில் வாழும் சச்சின் மீனாவைத் திருமணம் செய்துள்ளார்.
சமீபத்தில் பெண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்துள்ள சீமாவின் குடியுரிமை அவரது இந்தியக் கணவருடன் தொடர்புடையது. ஆகவே பாகிஸ்தானியர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ள மத்திய அரசின் அறிவிப்பு சீமாவுக்கு பொருந்தாது என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |