இலங்கைக்கு அனுப்பப்பட்ட பாகிஸ்தான் ராணுவம்: வேகமெடுக்கும் மீட்புப் பணி
டித்வா புயல் பேரிடர் மீட்புக்காக பாகிஸ்தானின் சிறப்பு மீட்பு குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அனுப்பப்பட்ட பாகிஸ்தான் ராணுவம்
இலங்கையை புரட்டி போட்டுள்ள டித்வா புயலால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அழிவை தொடர்ந்து, மீட்பு பணிகளை தீவிரப்படுத்துவதற்காக பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் முகம்மது ஷஹ்பாஸ் ஷரீப்பின் உத்தரவின் படி, பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு தேடல் மற்றும் மீட்பு குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் கோரிக்கையின் அடிப்படையில், பாகிஸ்தான் அரசு இலங்கைக்கான மனிதாபிமான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது.
மேலும், 47 பேர் கொண்ட சிறப்பு அணி மற்றும் 6.5 தொன் அவசியமான மீட்பு உபகரணங்களுடன் பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் துருஷ்பா எண்ணெய் குழாய் மீது உக்ரைன் தாக்குதல்: ஐரோப்பிய நாடுகளுக்கான விநியோகத்தில் சிக்கல்?
மீட்பு பணி தீவிரம்
பாகிஸ்தான் கடற்படை கப்பல்களும், உலங்கு வானூர்திகளும் ஏற்கனவே இலங்கையில் மீட்பு பணிகளை தொடங்கியுள்ளன.

இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு ஏற்ப பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக மாற்றீட்டு பணிகளுக்காக பாகிஸ்தான் ராணுவம் தற்காலிக பாலங்களையும் அனுப்பவுள்ளது.
அத்துடன் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம் என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |