இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல்
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மூலம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
தற்போது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தைபா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-மொஹம்மது (JeM) அமைப்புகள், இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவத தாக்குதலை நடத்த திட்டமிட்ட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
ரிஸின் பறிமுதல்
இதனையடுத்து, பயங்கரவாத எதிர்ப்பு படை(ATS) நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.

குஜராத்தின் காந்திநகர் மற்றும் பனஸ்கந்தாவில் நடத்திய சோதனையில், 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இதில், தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த டாக்டர் அகமது முகைதீன் சையத், சீனாவில் மருத்துவப் பட்டம் பெற்று, மருத்துவராகப் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இவரிடமிருந்து, மிக கொடிய நச்சுத்தன்மை கொண்ட ரசாயனமான ரிஸின் 4 லிட்டர் கைப்பற்றப்பட்டுள்ளது.
ரிஸின்(RICIN) என்பது ஆமணக்கு விதையில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு திரவமாகும். இதனை மக்கள் அருந்தினாலோ அல்லது சுவாசித்தாலோ கடுமையான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மேலும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தையல்காரரான ஆசாத் சுலேமான் ஷேக் (20), மாணவரான முகமது சுஹைல் முகமது சலீம் கான் ஆகியோர், ஆயுத பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இவர்களிடமிருந்து, 3 துப்பாக்கிகள் மற்றும் 30 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மூவரும் இணைந்து லக்னோ, டெல்லி, அகமதாபாத்தில் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்துள்ளது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் 350 கிலோ வெடிமருந்து பறிமுதல்
இதே போல், டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் நடத்திய சோதனையில், 350 கிலோ வெடிமருந்து மற்றும் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
350 கிலோ வெடிமருந்து டெல்லியில் பதுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் முஜாமில் சகீல் மற்றும் ஹரியானாவின் பரிதாபத்தை சேர்ந்த மருத்துவர் அடில் அகமதுவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் அடில் அகமதுவிடம் நடத்திய விசாரணையில், அவர் படித்த இளைஞர்களை பயங்கரவாத அமைப்புகளுக்கு சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதன் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |