உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு: இளம் வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் ரசிகர்கள் வருத்தம்
இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை 2023க்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை
இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
இதில் இந்தியா, அவுஸ்திரேலியா, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளது.
IANS
இந்நிலையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியை தழுவி இருந்தாலும், உலகக் கோப்பை தொடரில் எழுச்சி காணும் வகையில் பாபர் அஸம் தலைமையில் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி
பாபர் அஸம்(கேப்டன்), ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், ஷதாப் கான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹின் ஷா அஃப்ரிடி, முகமது வாசிம்.
PCB
இந்தியாவில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 2வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படுகிறது.
காயத்தில் நசீம் ஷா
பாகிஸ்தான் அணியில் 20 வயதே ஆன இளம் வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ஆனால் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்-4 சுற்றில் நசீம் ஷா காயமடைந்தார்.
இதனால் அவரால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |