எதிரணியின் அறைக்கே சென்று ஊக்குவிப்பு... ரசிகர்களின் இதயங்களை வென்ற பாகிஸ்தான் வீரர்கள்! வைரல் வீடியோ
நமீபியா வீரர்களை பாகிஸ்தான் அணியினர் நேரில் சென்று பாராட்டி ஊக்குவித்த வீடியோ இணையத்தில் பலரின் இதயங்களை வென்றுள்ளது.
நேற்று அபுதாபியில் நடந்த சூப்பர் 12 சுற்றில் நமீபியாவை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குரூப் 2வில் முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது பாகிஸ்தான் அணி.
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 189 ஓட்டங்கள் குவித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய நமீபியா அணி, 100 ரன்கள் கூட தாண்டாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் அவர்கள் பாகிஸ்தான் அணிக்கு சவலாக இருந்தனர்.
எனினும், இறுதியில் 144 ரன்கள் எடுத்து பாகிஸ்தானிடம் 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியத நமீபியா.
போட்டி முடிந்த பின், பாகிஸ்தான் வீரர்கள் நமீபியா அணியின் உடை மாற்றும் அறைக்கு நேரில் சென்று, அவர்களின் டி20 உலகக் கோப்பை பயணத்தை பாராட்டி ஊக்குவித்துள்ளனர்.
குறித்து வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அதில், ஷாஹீன் ஷா அப்ரிடி, முகமது ஹபீஸ், ஹசன் அலி, ஃபகார் ஜமான் மற்றும் ஷதாப் கான் போன்ற முன்னணி வீரர்கள் நமீபியாவின் வீரர்களிடம் சில ஊக்கமளிக்கும் வார்த்தைகளைச் சொல்வதைக் காணலாம்.
#SpiritofCricket - Pakistan team visited Namibia dressing room to congratulate them on their journey in the @T20WorldCup#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/4PQwfn3PII
— Pakistan Cricket (@TheRealPCB) November 2, 2021
பாகிஸ்தான் அணியின் பயிற்சி ஊழியர்கள் கூட நமீபியா அணியுடன் கலந்துரையாடுவதையும் காண முடிந்தது.
பாகிஸ்தான் வீரர்களின் இச்செயல் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது. பலர் இந்த நல்லிணக்கத்தை பாராட்டி வருகின்றனர்.