பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் விரும்பவில்லை! உண்மையை ஒப்புக்கொண்ட கேப்டன் டிம் பெய்ன்
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சில ஆஸ்திரேலிய வீரர்கள் விரும்பவில்லை என டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
2022 மார்ச் மாதம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதை நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிம் உறுதிப்படுத்தியது.
1998-க்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தானுடன் 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்று ஒரு டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, முதல் ஒரு நாள் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தொடரை ரத்து செய்து நாடு திரும்பினர்.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியான செய்தி பாகிஸ்தான் ரசிகர்களிடையே மகிழச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சில ஆஸ்திரேலிய விரும்பவில்லை என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
சில வீரர்கள் நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு மகிழச்சியடைவர்கள், மற்றவர்கள் இன்னும் சில விவரங்களை தெரிந்துகொள்ள விரும்புவார்கள்.
உண்மையை சொன்னால், ஆலோசனை மற்றும் விவரங்களை தெரிந்துக்கொண்ட பிறகும் சிலர் அதையெல்லாம் பொருட்ப்படுத்தாமல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பமாட்டார்கள்.
மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது கூட இது போன்ற பிரச்சினை நடந்துள்ளது.
கண்டிப்பாக மீண்டும் இது போன்ற பிரச்சினைகள் எழும். இதுகுறித்து நாங்கள் விவாதிப்போம், பிரச்சினை உள்ளவர்களுக்கு சரியான பதில் கிடைக்கும், பாதுகாப்பாக உணர்வார்கள்.
பின் சுற்றுப்பயணத்திற்கு எங்களால் முடிந்த அளவிற்கு சிறந்த அணியை தேர்வு செய்வோம். ஆனால் இறுதியில் வீரர்களின் தனிப்பட்ட முடிவை பொறுத்தே எல்லாம் இருக்கும்.
2017ல் பாகிஸ்தானில் நடந்த கண்காட்சி தொடரில் பங்கேற் உலக லெவன் அணியில் டிம் பெய்ன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2017 சுற்றுப்பயணத்தின் போது எங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு போல் இதுவரை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை.
எங்களுக்கு மேல் ஹெலிகாப்டர் பறந்து வந்தது, எங்களை சற்றி 5 கிலோ மீட்டருக்கு சாலைகள் மூடப்பட்டது, மைதானத்திற்கு செல்லும் வழியில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் சோதனை சாவடிகள் இருந்தது என பெய்ன் கூறினார்.