டி20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தானுக்கு 148 ரன் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து
2026 டி20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் நெதர்லாந்து 148 ஓட்டங்களை வெற்றி இலக்காக பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
நெதர்லாந்து ஆல்அவுட்
கொழும்பில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கிண்ணப் போட்டி நடந்து வருகிறது.

முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அணித்தலைவர் ஸ்கொட் எட்வார்ட்ஸ் (Scott Edwards) 29 பந்துகளில் 37 ஓட்டங்களும், பாஸ் டி லீட் 30 ஓட்டங்களும், லெவிட் 24 ஓட்டங்களும் எடுத்தனர்.

அபாரமாக பந்துவீசிய சல்மான் மிர்ஸா 3 விக்கெட்டுகளும், நவாஸ், அப்ரார் மற்றும் அயூப் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 53 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |