தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ்., வரலாறு படைத்த பாகிஸ்தான்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது பாகிஸ்தான்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் அபார வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் கிளீன் ஸ்வீப் செய்வது இதுவே முதல் முறையாகும்.
ஞாயிற்றுக்கிழமை ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி 42 ஓவரில் 271 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
ஆட்டநாயகனாக சைம் அயூப் தேர்வு செய்யப்பட்டார். அவர் 101 ஓட்டங்கள் குவித்தார். 2 கேட்ச்களை பிடித்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1st Time Ever In Cricket, Cricket history, Pakistan Script History With 3-0 Sweep vs South Africa, Pakistan vs South Africa 3rd ODI