முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய பாகிஸ்தான்
பாகிஸ்தான் மகளிர் அணி முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
சமரி அதப்பத்து
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹம்பந்தோதாவில் நடந்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ஓட்டங்கள் எடுத்தது.
அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 46 ஓட்டங்களும், நிலக்ஷிகா 46 ஓட்டங்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் வெற்றி
நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளும், தஸ்மியா ருபாப் 2 விக்கெட்டுகளும், ஃபாத்திமா சனா, உம்-இ-ஹனி மற்றும் சயீதா அரூப் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
குல் ஃபெரோஸா 78 (77) ஓட்டங்களும், சிட்ரா அமின் 57 ஓட்டங்களும் விளாசினர். கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |