வெளிநாட்டில் பெரும் அசம்பாவிதம் நிகழ்த்த திட்டம்: கனடாவில் வசிக்கும் ஆசிய நாட்டவர் சுற்றிவளைப்பு
அமெரிக்காவின் முக்கிய நகரில் யூத மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்த திட்டமிட்ட விவகாரத்தில் கனடாவில் வாழும் ஆசிய நாட்டவர் கைதாகியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டவர்
வெறும் 20 வயதேயான அந்த நபர், இஸ்ரேலில் ஹமாஸ் முன்னெடுத்த அக்டோபர் 7 தாக்குதலின் முதல் ஆண்டு நினைவு நாளில் நியூயார்க் நகரில் யூத மக்கள் மீது தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் பாகிஸ்தான் நாட்டவர் என்றும் முகமது ஷாசீப் கான் என்பது அவரது பெயர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி நியூயார்க் நகரில் தாக்குதல் நடத்தவே முகமது ஷாசீப் கான் திட்டமிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த திடீர் தாக்குதலில் 1,200 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து வந்தாலும், 600 பேர்கள் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே தனியார் அமைப்புகள் குறிப்பிடுகின்றன.
ஆனால் பதிலுக்கு இஸ்ரேல் முன்னெடுத்துவரும் கொடூர ராணுவ நடவடிக்கைகளில் இதுவரை கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 41,000 எட்டியுள்ளது. மட்டுமின்றி காஸா பகுதிக்கான மொத்த உதவிகளையும் இஸ்ரேல் முடக்கியுள்ளதால் மிக மோசமான பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
மிக மோசமான தாக்குதல்
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐ.எஸ் அமைப்பு மீதான தமது ஆதரவை சமூக ஊடக பக்கத்தில் ஷாசீப் கான் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரகசிய பொலிசார் ஷாசீப் கானுடன் தொடர்பு கொண்டு, அவரது தாக்குதல் திட்டம் குறித்து தகவல்களை சேகரித்துள்ளனர்.
மட்டுமின்றி, தாம் தொடர்பு வைத்திருப்பது பொலிசார் என உணராமல், தமது தாக்குதல் திட்டத்திற்கு ஆயுதம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். நியூயார்க் நகரில் யூத மக்கள் அதிகமாக வசிப்பதால், தமது தாக்குதலை அந்த நகரில் நிகழ்த்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்களது திட்டம் நிறைவேறும் என்றால் அது அமெரிக்க மண்ணில் மிக மோசமான தாக்குதல் சம்பவமாக இருக்கும் என்றும் கான் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அக்டோபர் தாக்குதலுக்காக அமெரிக்கா புறப்பட்ட கான், அமெரிக்க - கனடா எல்லையில் 12 மைல்கள் தொலைவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமானால் 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |