65 வயதில் ஆரம்பப் பாடசாலையில் சேர்ந்த முதியவர்; நெட்டிசன்கள் பாராட்டு
பாகிஸ்தானில் 65 வயது முதியவர் ஒருவர் ஆரம்பப் பாடசாலையில் முதல் வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார். அவரை பலரும் பாராட்டிவருகின்றனர்.
படிப்பில் ஆர்வம் இருந்தால் வயது என்பது வெறும் எண்தான் என்பதை முதியவர் ஒருவர் நிரூபித்துள்ளார்.
ரூ.464 கோடி நிறுவனத்தை உருவாக்கிய தமிழக கிரிக்கெட் வீரர்., ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் முதலீடு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அப்பர் டிரில் வசிக்கும் 65 வயதான திலாவர் கான், அரசு தொடக்கப் பாடசாலையில் சேர்ந்து தனது கல்வி பயணத்தைத் தொடங்கினார். கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்பதை கானின் கதை நிரூபித்து ஊக்கமளிக்கிறது.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த திலாவர் கான் சிறுவயதிலிருந்தே தனது தனிப்பட்ட விஷயங்களில் குடும்பப் பொறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருந்தது.
ஓய்வு பெறும் வயதில் படிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் வைத்துக்கொண்டு பள்ளி வாழ்க்கையைத் தொடங்குவது உண்மையில் பாராட்டுக்குரியது.
திலாவர் கானுக்கு அரசுப் பாடசாலை கோங்சாய் உற்சாக வரவேற்பு அளித்தது. படிக்க வேண்டும் என்ற ஆசைக்கு பாடசாலை ஊழியர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
வகுப்பறையில் குழந்தைகள் நடுவில் அமர்ந்து படிக்கும் திலாவர் கான் புகைப்படத்தைப் பார்க்கும்போது அழகாகத் தெரிகிறது.
Propergaanda என்ற இன்ஸ்டாகிராம் பயனர், திலாவர் கானின் எழுச்சியூட்டும் கதையைப் பகிர்ந்துள்ளார். தனிப்பட்ட காரணங்களால் படிப்பை தாமதப்படுத்தியவர்களுக்கு திலாவரின் கதை ஒரு உத்வேகம் என்று அவர் எழுதினார்.
வாழ்க்கையின் எந்த நிலையிலும் கல்வியின் மூலம் அறிவைப் பெற முடியும் என்பதை திலாவர் கானின் கதை வலியுறுத்துகிறது. திலாவர் கான் பற்றி அறிந்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். பெருமை கொள்கிறோம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். திலாவர் கானின் கதை வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Education, Old Age Education, Pakistan, Education Matters, Education for All