பாரீஸில் முகேஷ் அம்பானியுடன் காணப்பட்ட பாகிஸ்தான் பெண் அரசியல்வாதி: யார் அவர்?
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியும் பாகிஸ்தான் பெண் அரசியல்வாதி ஒருவரும் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
முகேஷ் அம்பானியுடன் பாகிஸ்தான் பெண் அரசியல்வாதி
சமீபத்தில், பிரான்ஸ் தலநகர் பாரீஸுக்கு அருகில் அமைந்துள்ள டிஸ்னிலேண்ட் பாரீஸ் என்னும் தீம் பார்க்கில், இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியுடன், பாகிஸ்தான் நாட்டு பெண் அரசியல்வாதி ஒருவர் நிற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்தப் பெண்ணின் பெயர், ஷர்மிலா (Sharmila Faruqui). பாகிஸ்தான் அரசியல்வாதியான ஷர்மிலா, முகேஷ் அம்பானி மற்றும் அவரது பேத்தியுடன் தான் நிற்கும் புகைப்படங்களை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஏற்கனவே அவர் முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துகொண்டிருந்தார்.
ஷர்மிலா, பாகிஸ்தானின் Bilawal-Bhutto Zardari's Pakistan People’s Party என்னும் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
அவரது தாத்தாவான N M Uqaili, பாகிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர். அத்துடன், ஷர்மிலாவின் சகோதர முறை உறவினரான Salman Faruqui, பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |