வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு வந்த பாகிஸ்தானியரின் கொடூர செயல்! பரிதாபமாக இறந்த இந்திய தம்பதி: சாட்சியமளிக்கும் மகள்கள்
துபாயில் இந்திய தம்பதியர், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தம்பதியரின் இரண்டு மகள்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் சாட்சியளிக்க உள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த தம்பதியயார் ஹிரென் ஆதியா(48) மற்றும் அவரது மனைவி விதி(40) ஆகியோர் துபாயில் இருக்கும் ரேபியன் ராஞ்செஸ் பகுதியில் உள்ள தங்களது வீட்டில் வசித்து வந்தனர்.
இவர்களின் இரண்டு மகள்கள் உள்ளனர் இந்நிலையில், சம்பவ தினமான கடந்த 2020-ஆம் ஆண்டு ஜுன் 17-ஆம் திகதி 26 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளியால், இந்த தம்பதியனர் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்த 26 வயது மதிக்கத்தக்க இளைஞன், வீட்டில் பரமாரிப்பு வேலைக்காக வந்துள்ளான். அப்போது வீட்டில் ஏராளமான பணம் இருப்பதைக் கண்டு, அதை திருட திட்டுமிட்டு, இவர்கள் இருவரையும் படுகொலை செய்துள்ளான்.
அப்போது வீட்டில் இருந்த இரண்டு மகள்களும் அவனை பிடிக்க போராடி, அவனிடம் கத்து குத்து எல்லாம் வாங்கி, காயங்களுடன் பொலிசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர்.
இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு அங்கிருக்கும், நீதிமன்றத்தில் வரும் 10-ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது. அந்த விசாரணையின் போது, கொலை செய்யப்பட்ட தம்பதியினர் 13 மற்றும் 18 வயது மதிக்கத்தக்க மகள்கள் இரண்டு பேர் சாட்சியளிக்கவுள்ளனர்.
இதையடுத்து முழு விசாரணைக்கு பின், அந்த நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
