19 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என அடம்
19 ஆண்டுகளாக ஆந்திராவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண்ணை நாட்டை விட்டு வெளியேற பொலிஸார் வலியுறுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் பெண் முடிவு
இந்திய மாநிலமான கர்நாடகா, பெல்லாரியை சேர்ந்தவர் மகபூப் பீரான். இவர் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தானுக்கு சென்று விட்டார். அங்கேயே திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
இதில் தனது இளைய மகள் ஜீனத் பீரானை ஆந்திராவில் உள்ள தர்மாவரம் பகுதியில் வசிக்கும் தனது தங்கையின் மகன் ரஃபீக் அகமதுவுக்கு கடந்த 1989-ம் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை தர்மாவரத்தில் பிறந்தது.
ஆனால், ஜனத் இரண்டாவதாக கர்ப்பம் தரித்தபோது அவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் பாகிஸ்தான் சென்றார். ஆனால், அந்த நேரத்தில் கார்கில் போர் தொடங்கியதால் அவர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை அங்கேயே பிறந்ததால் அந்த குழந்தை பாகிஸ்தான் பிரஜையானார். இவருடைய மகளின் பெயர் ரம்ஷா ரஃபீக்.
பின்னர் தனது இரண்டாவது மகளை அழைத்துக் கொண்டு 2005-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். இங்கு வந்து ரம்ஷா படித்தாலும் அவர் இந்திய பிரஜை ஆவதை விரும்பவில்லை.
அதன்படி 2018-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரஜையாகவே இருந்தார். இது 2028 வரை செல்லுபடியாகும். பின்னர், கடந்த 2023-ம் ஆண்டில் இந்திய பிரஜை ஆக விரும்புவதாக விண்ணப்பித்தபோது அரசு அதனை நிராகரித்தது.
இந்நிலையில், காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் ரம்ஷா ரஃபீக் விவகாரம் வெளியில் வந்தது.
பின்னர், இவர் 30-ம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென அங்குள்ள பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், தனது 7 வயதில் இந்தியாவிற்கு வந்து 19 ஆண்டுகளாக இங்கு வசித்து வந்ததால் பாகிஸ்தான் செல்ல மாட்டேன் என அந்த பெண் அடம் பிடிக்கிறார்.
ஆனால், இவரை இங்கு தொடர்ந்து வசிக்க அனுமதிக்க இயலாது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |