இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேறாவிட்டால் 3 ஆண்டுகள் சிறைக்கு வாய்ப்பு
குறித்த நேரத்துக்குள் இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேறாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்புள்ளது.
3 ஆண்டுகள் சிறை
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவியுள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு கடுமையான முடிவுகளை எடுத்தது. அதன்படி பாகிஸ்தான் குடிமக்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மேலும், குறிப்பிட்ட விசாக்களை கொண்ட பாகிஸ்தானியருக்கு நேற்று தான் இந்தியாவை விட்டு வெளியேற கடைசி நாளாக இருந்தது.
அந்த வகையில் ஏப்ரல் 24 முதல் அடுத்த 4 நாட்களில் 9 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 537 பாகிஸ்தானிய குடிமக்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும், பஞ்சாபில் உள்ள எல்லைக் கடக்கும் வழியாக பாகிஸ்தானிலிருந்து தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தம் 850 இந்தியர்கள் திரும்பியுள்ளனர்.
இதில், குறித்த நேரத்துக்குள் இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேறாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |