ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!
2021 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை குரூப் சுற்றில் நடந்த போட்டியில் இந்தியா அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழத்தி பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டி 2021 டிசம்பர் மாதம் 23ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகள் இரண்டு குரூப்பாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றில் விளையாடி வருகின்றன.
‘குரூப் ஏ’ அணிகள்- ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் இடம்பிடித்துள்ளன.
‘குரூப் பி’ அணிகள்- வங்கதேசம், நேபாளம், குவைத், இலங்கை இடம்பிடித்துள்ளன.
குரூப் சுற்றில், தங்கள் குரூப்பில் இடம்பெற்றுள்ள அணியுடன் ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும். குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
இன்று ஐசிசி அகடாமி-ஓவல் 2 மைதானத்தில் நடந்த போட்டியில் குரூப் ஏ-வில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த Yash Dhull தலைமையிலான இந்திய அணி 49வது ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 237 எடுத்தது.
அதிகபட்சமாக இந்திய வீரர் Aaradhya Yadav 50 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் பந்து வீச்சில் Syed Zeeshan Zameer 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய Qasim Akram தலைமையிலான பாகிஸ்தான் அணி, 50வது ஓவரில் 8 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
அதிகபட்சமாக Muhammad Shahzad 81 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பந்துவீச்சில் Rajangad Bawa 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் குரூப் ஏ புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.