20 ஓவர்களில் ஆல்அவுட் ஆகாமல் 57 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த அணி!
பாகிஸ்தானின் சிட்ரா அமீன் 31 ஓட்டங்களும், முனீபா அலி 21 ஓட்டங்களும் எடுத்தனர்
ஆசியக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மலேசியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
சில்ஹெட்டில் தொடங்கிய போட்டியில் முதலில் ஆடிய மலேசியா அணி ஓட்டங்கள் எடுக்க தடுமாறியது. பாகிஸ்தான் வீராங்கனைகள் ஒமைமா சொஹைல், துபா ஹசன், டயானா, சடியா ஆகியோர் மிரட்டலாக பந்துவீசினர்.
Getty Images
இதனால் மலேசியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 57 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக எல்சா ஹண்டர் ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் எடுத்தார்.
Getty Images
பாகிஸ்தானின் ஒமைமா 3 விக்கெட்டுகளையும், துபா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Off to a winning start ?
— Pakistan Cricket (@TheRealPCB) October 2, 2022
Pakistan cruise to a nine-wicket victory over Malaysia ?#PAKvMAL | #WomensAsiaCup2022 https://t.co/xU5PhRJdFl pic.twitter.com/5V6TszmUvo