இலங்கை அணியை பந்தாடிய பாகிஸ்தான்! அபார வெற்றி
கராச்சியில் நடந்த ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தியது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி, கராச்சியின் சவுத்எண்ட் கிளப் மைதானத்தில் இன்று நடந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பேட்டிங்கை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் ஹாசினி பெரேரா 4 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹன்சிமா 12 ஓட்டங்களில் வெளியேறினார். கேப்டன் அதப்பட்டு 39 பந்துகளில் 25 ஓட்டங்களும், பிரசதானி 30 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆனால் ஏனைய வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். எனினும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் துடுப்பாடிய கவிஷா தில்ஹாரி 50 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் எடுத்தார்.
A real captain's innings from the dependable @maroof_bismah ?
— Pakistan Cricket (@TheRealPCB) June 1, 2022
? @TheRealPCB_Live
Watch Live ➡️ https://t.co/oeRT1m2sMp
#⃣ #PAKWvSLW | #BackOurGirls pic.twitter.com/mzfzNfse3E
பாகிஸ்தானின் அபாரமான பந்துவீசினால் இலங்கை அணி 169 ஓட்டங்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணி தரப்பில் பாத்திமா 4 விக்கெட்டுகளும், இக்பால் மற்றும் சனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
Photo Credit: Sri Lanka Cricket Twitter
தொடக்க வீராங்கனை முனீபா அலி 14 ஓட்டங்களில் அச்சினி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கைகோர்த்த சிட்ரா அமீன்-பிஸ்மா மாரூப் இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் குவித்தது. ஒஷாட ரணசிங்கே பந்துவீச்சில் 76 ஓட்டங்கள் குவித்த சிட்ரா ஆட்டமிழந்தார்.
Photo Credit: Sri Lanka Cricket Twitter
இறுதியில் பாகிஸ்தான் அணி 41.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
Photo Credit: Sri Lanka Cricket Twitter
Photo Credit: Sri Lanka Cricket Twitter